ஒழுங்கு விதிகள்

நிலையத்தினுள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குவிதிகள்:
  • நன்மோன நிறைவே சிவதொண்டன் நிலையத்துக் குறிக்கோள். இந்நன்மோன நிறைவுக்கு இடையூறேதும் நேராதவண்ணம் சிவதொண்டன் அன்பர்கள் நடந்துகொள்ளுதல் கடப்பாடாகும்.
  • சிவதொண்டன் நிலையத்துக்கு வரும் தொண்டர்கள் பாதணிகளைக் கழற்றி, கால்களைச் சுத்தஞ் செய்துகொண்டு உள்ளே போகவேண்டும்.
  • தத்தமக்கெனக் குறிக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்தல்வேண்டுமன்றிப் பிறர் விஷயங்களில் தலையிடக்கூடாது.
  • அன்பர்கள் புறத்தூய்மையோடு உள்ளத் தூய்மையுடையவர்களாக இருத்தல்வேண்டும்.
  • இந்நிலையத்திற்கு வரும் அன்பர்கள் திருமுறை ஓதலோ, புராண படனமோ நடைபெறும்போது ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ளுதல் வேண்டும். பிறரெவர்க்கும் அசௌகரியத்தை உண்டுபண்ணக்கூடாது.
  • சிறப்பாக மேற்குறித்த சமயங்களில், பொதுவாக எந்த நேரத்திலும் சிவத்தியானம், சமய சம்பந்தமான விஷயங்கள் ஆகியனவற்றைப் பற்றியன்றி உலகார்த்தமான விஷயங்கள் எவற்றையும் பேசுதல் கூடாது.
  • நிலையத்தினுட் புகைப்படமெடுத்தல் முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.
  


எங்கள் ஆசான் அருள்மொழி

கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
    
DAILY MEDITATION
1.8 It is God who sees as the eye behind our eye. Brahman fills us entirely. - YOGA SWAMIGAL

நிகழ்வுகள்
- Coming Soon

சஞ்சிகைகள்
- Coming Soon