யோகசுவாமிகளுடைய சிந்தையிலே நல்லூர்த்தலம் போன்று சித்தாண்டித்திருத்தலம் நன்றாகப் பதிந்திருந்தது. அவ்விடத்திலே ஒரு சிவதொண்டன் நிலையம் அமையவேண்டுமெனச் சுவாமிகள் திருவுளம் பற்றினார். அவரது திருவுளப்பாங்கின் வண்ணம் சித்தாண்டி-செங்கலடியில் ஒரு மௌனமாயிருந்து இளைப்பாறும் இச்சிவதொண்டன் நிலையம் சுவாமிகள் திருவடிக்கலப்புற்ற ஆண்டு (1964) பங்குனி மாதத்தில் காலூன்றியது.
செங்கலடி சிவதொண்டன் நிலையத்தின் முகப்புத்தோற்றம்
தியானமண்டபத்திருக்கும் திருவடி
ஓர் ஆரணியச் சூழலில் அமைந்த பண்டைய ஆச்சிரமத்தின் தோற்றத்தினைப் போன்றதான இந்நிலையம் நியமங்களில் யாழ் சிவதொண்டன் நிலையத்தை ஒப்பதாகும். யாழ் சிவதொண்டன் நிலையத்து முதன்மையான சாதனை சிவத்தியானமெனின் இடமகன்ற ஆச்சிரம வளவினையும், வள வயல்களையும் கொண்ட செங்கலடி சிவதொண்டன் நிலையத்தின் முதன்மையான சாதனை சிவதொண்டு ஆகும்.
எங்கள் ஆசான் அருள்மொழி
கடவுளால் ஒன்று செய்யமுடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
DAILY MEDITATION 1.8 It is God who sees as the eye behind our eye. Brahman fills us entirely. - YOGA SWAMIGAL